திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலம் நோக்கிய பாத யாத்திரை 24ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பாத யாத்திரை திருகோணமலை புனித மரியன்னை பேராலயம், அலஸ்தோட்டம் இறையிரக்க திருத்தலம், அன்பொளிபுரம் சதாசகாய மாதா ஆலயங்களில் தனித்தனியாக ஆரம்பமாகி பாலையூற்று ஆலய சந்தியில் ஒன்றிணைந்து பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது.

இவ்யாத்திரையில் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 5000ற்கும் அதிகமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin