கவிஞர் திருமகள் குளோரியா ரூபா அவர்களின் “பாரதியும் நானும்” கவிதை நூல் வெளியீடு மார்கழி மாதம் 15ஆம் திகதி திங்கட்கிழமை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலக்ஸ்மி மண்டபத்தில் நடைபெற்றது.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் திரு. சந்திரமௌலீசன் லலீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் வேல்நம்பி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைக்க நூலுக்கான வெளியீட்டுரையை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபமாலை அன்புராசா அவர்களும் நயப்புரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் கவிஞர் வேல். நந்தகுமார் அவர்களும் வழங்கினார்கள்.

அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், பொதுமக்களென பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin