பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தையின் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அத்துடன் பாசையூர் பங்கிற்குட்பட்ட வளன்புரம் சூசையப்பர் ஆலயத்திலும் அன்றைய தினம் திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
