கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி ஒளிவிழா கார்த்திகை மாதம் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கல்லூரி முதல்வர் திரு. குமாரசாமி ரவீந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அருட்சகோதரி பிரபாஜினி பிரான்சிஸ் அவர்களின் வழிகாட்டலில் கிறிஸ்தவ மன்ற பொறுப்பாசிரியர் திரு. சத்தியசீலன் டனிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் 2024ஆம் ஆண்டு மறைக்கல்வி பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண நிதிப்பொறுப்பாளர் அருட்தந்தை கமலானந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் செபமாலைதாசர் சபை மாகாண ஆலோசகர் அருட்தந்தை ஜோண்சன் ராஜசேகர் மற்றும் கிளிநொச்சி வடக்கு வலய சமயபாட ஆசிரிய ஆலோசகர் திரு. வேலுப்பிள்ளை செல்வகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

By admin