முழங்காவில் பங்கின் பல்லவராயன்கட்டு வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 08ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
05ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணைவிழா திருப்பலியில் 03 சிறார்களுக்கு முதல்நன்மை அருட்சாதனமும் வழங்கிவைக்கப்பட்டது.
திருவிழா திருப்பலியை கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லும் இரணைமாதாநகர் பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களால் நாட்டிவைக்கப்பட்டது.