கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட இலங்கை நாட்டின் சுதந்திர தின நிகழ்வு மாசி மாதம் 04ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கையின் தேசிய கொடியேற்றப்பட்டு தொடர்ந்து மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, விளையாட்டுக்கள், மகிழ்வூட்டல் செயற்பாடுகள், திரைப்பட காட்சிப்படுத்தல் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் நாட்டின் அனைத்து இனங்கள் மற்றும் சமயங்களை பிரதிபலிக்கும் வகையில் மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் ஆடைகளை அணிந்து பங்குபற்றியிருந்தனர்.

