கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட டொன் பொஸ்கோ திருவிழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் தை மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிறுவன இயக்குனர் அருட்தந்தை மெல்வின் றோய் மற்றும் டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிலைய அதிபர் அருட்தந்தை கஜான் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலியை தொடர்ந்து கல்வியகத்தில் கணினி, ஆங்கிலம், கேக் ஜசிங், தையல் மற்றும் ஆரி வேர்க் கற்கைநெறிகளை பூர்த்திசெய்த மாணவர்கள் மற்றும் டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையில் 2025ஆம் கல்வியாண்டில் சிறந்த பெறுபேறுகளைபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தைகள், அருட்சகோதரிகள், அரச உத்தியோகஸ்தர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், டொன்பொஸ்கோ நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin