பதுளை மறைமாவட்டம், ஹப்புத்தளை கஹாகல்ல திருமறைக் கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட “பலிக்களம்” திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை பங்குனி மாதம் 27ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஹப்புத்தள புனித செபஸ்தியார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இவ்வாற்றுகை யாழ். திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஆலோசனை மேற்பார்வையில் ஹப்புத்தள புனித செபஸ்தியார் ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை மேர்வின் அவர்களின் வழிநடத்தலில் ஹப்புத்தள திருமறைக்கலாமன்ற இணைப்பாளர் திரு. ஐசாக் அவர்களின் உதவியுடன் மேடையேற்றப்பட்டது.
பிரமாண்டமான 120 அடி அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இசையமைப்பு, ஒலி, ஒளி போன்றவற்றுடன் அரங்கிலும், அரங்கப் பின்னணியிலும் நூறுக்கும் அதிகமான கலைஞர்களின் பங்கேற்புடன் மேடையேற்றப்பட்ட இத்தவக்கால ஆற்றுகையை யாழ். திருமறைக்கலாமன்ற வளவாளர் திரு. ஜெகன் கரன்சன் அவர்களுடன் இணைந்து ஹப்புத்தள மன்ற கலைஞர்கள் திரு. பிரபா, திரு. மைக்கல் மற்றும் திருமறைக்கலாமன்ற தேசிய இணைப்பாளர் திரு. சதீஸ்குமார் ஆகியோர் நெறிப்படுத்தினர்.
இவ்வாற்றுகையில் பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த, அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் பங்குபற்றினர்.

