உயிர்த்த ஞாயிறு தினத்தை சிறப்பித்து பலாலி பங்கின் புனித டொன் பொஸ்கோ இளையோர் ஒன்றியத்தியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், நீச்சல் மற்றும் படகோட்ட போட்டிகளும் மாலை பலாலி விண்மீன் விளையாட்டுகழக மைதானத்தில் மைதான விளையாட்டுக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நிதி முகாமையாளர் அருட்தந்தை டினேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

By admin