குடும்ப வாழ்வை வளப்படுத்தும் நோக்கில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் பலாலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களை வலுவூட்டும் சிறப்பு நிகழ்வு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை நடைபெற்றது.
பலாலி பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நற்கருணை வழிபாடு, இல்ல தரிசிப்புக்கள், உள ஆற்றுப்படுத்தல்கள், கருத்தமர்வுகள், திருப்பலி என்பன இடம்பெற்றன.
13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறுதிநாள் குடும்பநாளாக அனுஸ்ரிக்கப்பட்டு அன்று மாலை கலைநிகழ்வுகளும் அன்பிய உணவுப் பகிர்வும் அங்கு இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் பங்கு மக்கள் மிகவும் ஆர்வத்தடன் பங்குபற்றினர்.