பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் மறைக்கோட்ட பங்கு இளையோர்களிடையே முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி மார்கழி மாதம் 04ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறை புனித தோமையார் பெண்கள் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் பருத்தித்துறை பங்கு முதலாம் இடத்தையும் புலோப்பளை பங்கு இரண்டாம் இடத்தையும் மணற்காடு பங்கு மூன்றாமிடத்தையும் மறைக்கோட்ட ரீதியாக பெற்றுக்கொண்டன.

