பருத்தித்துறை மறைக்கோட்ட அருட்பணி சபை கூட்டம் கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று பருத்தித்துறை புலோலி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபையின் கடந்தகால எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் யாழ். மாவட்ட செயலக உளவளத்துணை இணைப்பாளர் திரு. உதயகுமார் அவர்களால் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்துரையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்பணிசபை அங்கத்தவர்களென 75 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

By admin