பருத்தித்துறை தும்பளை புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
02ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
தும்பளை லூர்த்து அன்னை கெபி கட்டப்பட்டு இவ்வருடம் 100ஆவது ஆண்டு நிறைவாக அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

