திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவிகளும் நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்சினி கரன்சன் அவர்களின் மாணவிகளுமான செல்வி ஜனுக்சா வெஸ்லி ஜுட்ஸன், செல்வி றக்சிகா ரஜிகரன், செல்வி ஜெனிலியா யூட் கிறிஸ்ரியன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்தியா, சென்னை கலாஸேத்ரா அறக்கட்டளை முன்னாள் முதல்வரும் ஓய்வுநிலை பேராசிரியருமான ஜெனார்த்தனன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரங்கேற்றத்துடன் நடனத்துறை சார்ந்த 15 மூத்த கலைஞர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திரு. ஸ்ரீசற்குணராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும் திருமறைக்கலாமன்ற நிர்வாக இயக்குநர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் லண்டன் நாட்டில் இயங்கும் “சாஸ்வதம்” அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா அவர்களும் கலந்துகொண்டார்.
இந்நிகழ்விற்கான நிதியனுசரணையை “சாஸ்வதம்” அமைப்பு வழங்கியிருந்ததுடன், திருமறைக்கலாமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 60ஆம் ஆண்டு வைரவிழா சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக இது முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.