யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக பதுளை மறைமாவட்ட இறைமக்களால் முன்னெடுக்கப்பட்ட மன்னார் மடு திருத்தலம் நோக்கிய திரு யாத்திரை யூலை மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது.
பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருயாத்திரை பங்குகளிலிருந்து 24ஆம் திகதி தனித்தனியாக ஆரம்பமாகி அன்றைய தினம் மடுத்திருத்தலத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து அங்கு திருச்செமாலையும், தனி வழிபாடும் இடம்பெற்றன.
அத்துடன் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை சிறப்பு திருப்பலியும் திருப்பலி நிறைவில் மடு பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற ஆலய தரிசிப்புக்களும் இடம்பெற்றதுடன் மாலை திருச்செபமாலை, சிறப்பு நற்கருணை வழிபாடு, மெழுகுவர்த்தி பவனி என்பனவும் இடம்பெற்றன.
26ஆம் திகதி காலை சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ மற்றும் பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
இவ்யாத்திரையில் பதுளை மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 2000ற்கும் அதிகமான இறைமக்கள் பங்குபற்றியிருந்தனர்.