பதுளை மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது.
திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை டிலாந்த பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இரத்தினபுரி மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை அன்ரன் சிறியான் அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரை, கலந்துரையாடல் ஊடாக மாநாட்டை நெறிப்படுத்தியிருந்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குகளின் திருவழிபாட்டு இணைப்பாளர்கள், பங்கு பிரதிநிதிகனௌ 150 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.