உயிர்த்த ஆண்டவர் சமூகத்தின் ஏற்பாட்டில் பதுளை புனித மரியாள் பேராலயத்தில் புதுப்பித்தலின் தூய ஆவியார் ஆராதனை நடைபெற்றது.
05ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஆரம்பமாகிய இவ் ஆராதனையில் இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, அபிசேக வழிபாடு என்பன இடம்பெற்றதுடன் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிசாந்த சில்வா அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்படும் திருப்பலியுடன் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் ஏராளமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.