அருகிவரும் கிறிஸ்தவ கலைகளை பாதுகாத்து அவற்றை வளர்க்கும் நோக்கோடு இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தமிழ்மொழி மூலமான பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி புலம்பல் பாடல் போட்டிகள் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றன.
திணைக்கள பணிப்பாளர் திருமதி சதுரி பிந்து அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த 24 அணிகள் பங்குபற்றினர்.
அத்துடன் மன்னார் மறைமாவட்டத்தில் இப்போட்டிகள் 22ஆம் திகதி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

