நெடுந்தீவு புனித யோசவாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட புனித யோசேவாஸ் திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித யுவானியார் ஆலயத்தில் நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜோகராஜ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொரூப ஆசீரும் இடம்பெற்றது.

