யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தினால் நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் வழிநடத்தலில் புனித யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள், கற்பித்தல் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 200 மறைக்கல்வி மாணவர்களும் 15 மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.
