நெடுந்தீவு சென் அன்ரனீஸ் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை சென் அன்ரனீஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்ற அரங்க முன்றலில் நடைபெற்றது.
நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன் அருட்தந்தை சோபன் றூபஸ், கன்னியர்மட முதல்வி அருட்சகோதரி சுகிர்த செல்வி, றோ.க.மகளிர் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி மரீனா, நெடுந்தீவு பிரதேச செயலக முன்பிள்ளை பருவ மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி டானியல் நிசாந்தினி, ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களெ பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.