தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நெடுந்தீவு சென். அன்ரனீஸ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகளும் தொடர்ந்து காளாமுனை கடற்பரப்பிலிருந்து சென் அன்ரனீஸ் சனசமூக நிலைய கடற்பகுதி வரையில் நீச்சல் மற்றும் தெப்பம் வலித்தல் போட்டிகளும் இடம்பெற்றன.

இப்போட்டிகளில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin