நெடுந்தீவின் கடல் வளமும் மக்களின் வாழ்வாதாரமும் மேம்பட நெடுந்தீவு பிரதேசத்தில் கோயில்கொண்ட அனைத்து புனிதர்களின் பரிந்துரை வேண்டி முன்னெடுக்கப்பட்ட சிறப்பு கடற்பவனி மாசி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட இப்பவனி நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலய கடற்பரப்பில் ஆரம்பமாகி புனித அந்தோனியார், புனித சவேரியார், புனித மரியன்னை, புனித பற்றிமா அன்னை, புனித யுவானியார், புனித தோமையார், புனித யாகப்பர், இறையிரக்க ஆண்டவர், புனித லவுறேஞ்சியார் மற்றும் புனித யூதாததேயு ஆகியோரின் திருச்சொருபங்களையும் இணைத்து கடற் பவனியாக மணற்கடற்கரை பகுதியை வந்தடைந்தது.
தொடர்ந்து திருச்சொருபங்கள் வீதி வழியாக வேளாங்கன்னி சிற்றாலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அன்று மாலை சிறப்பு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து சுருபங்கள் கடல் வழியூடாக அந்நதந்த ஆலயங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன.

