நாவாந்துறை பங்கு புனித நீக்கிலார் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 07ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்பள்ளி பொறுப்பாளர் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரி அனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும், சிறார்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் நாவாந்துறை பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை டினுசன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரி ரஞ்சனா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
