நாவாந்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா மார்கழி மாதம் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளரும் உருவாக்குநருமான அருட்தந்தை குயின்ஸன் பெர்னான்டோ அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், நாவாந்துறை றோ.க.த.க பாடசாலை அதிபர் திரு. அன்ரன் செல்வநாயகம் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

By admin