நாவாந்துறை பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்கான பாசறை ஐப்பசி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாதகல் புனித லூர்த்து அன்னை கெபியில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் விக்டோரியா தலைமையிலான குழுவினர் வளவாளர்களாக கலந்து விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், கருத்துரைகள் என்பவற்றின் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் 80ற்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.