பதுளை மறைமாவட்டம் நாயபட்ட வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பற்றிக் இதயகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி சனிக்கிழமை காலை இறந்த விசுவாசிகளுக்கான சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாலை நற்கருணைவிழாவும் இடம்பெற்றன.

நற்கருணைவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனி நடைபெற்றது.

திருவிழா மற்றும் நற்கருணைவிழா திருப்பலிகளை பிரான்சிஸ்கன் சபை அருட்தந்தை பெனடிக்ற் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin