சுன்னாகம் நாக்கியபுலம் புனித லூர்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

9ம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை யோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குளமங்கால் பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராஜர் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி ஆரம்பத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள ஆலயத்திற்கான அடிக்கல்லும் குருமுதல்வர் அவர்களால் நாட்டிவைக்கப்பட்டது.

திருவிழா திருப்பலியில் கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துசெபித்தனர்.

By admin