திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை தாதியர் நிலையத்தில் தாதியர் பயிற்சியை மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் பற்றிய சிறப்பு கருத்தமர்வு பங்குனி மாதம் 04ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி அனுசலா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் கலந்து பங்கேற்பாளர்களை வழிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் 70 வரையான தாதிய மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin