கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலை மற்றும் தொழில் பயிற்சி நிறுவன ஆசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் பற்றிய சிறப்பு கருத்தமர்வு மாசி மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன்பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் கலந்து கருத்துரைகள், குழு ஆய்வுகள், கலந்துரையாடல், விழிப்புணர்வு பட காட்சிப்படுத்தல் என்பவற்றின் ஊடாக ஆசிரியர்களை வழிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் 30 வரையான ஆசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

