சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழா சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவ விமர்சனம், ஆதிகாலத்து பாப்புமார் சரித்திர சங்கிரகம் ஆகிய நூல்கள் இளையோரால் மீள்பதிப்பு செய்யப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் கலைநிகழ்வுளும் இடம்பெற்றன.

கலைநிகழ்வுகளில் “சுவாமி ஞானப்பிரகாசரின் பணிகளில் மேலோங்கி இருப்பது மறைப்பணியா தமிழ்ப்பணியா” என்னும் தலைப்பில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான விவாதப்போட்டியும் யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் மற்றும் யாழ்ப்பாணம் பாசையூர் சென் அன்ரனிஸ் மகளிர் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான வினாடிவினாப்போட்டியும், விவாதப்போட்டி, வினாடிவினாப்போட்டி மற்றும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் முப்பொன் விழாவை முன்னிட்டு பங்கு மறைக்கல்வி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபமாலை அன்புராசா அவர்கள் பிரதம விருந்தினராகவும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யோசப் யுவனல் கமலனாதன் அவர்கள் சிறப்பு விருத்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

 

By admin