முல்லைத்தீவு மறைக்கோட்டம் உடையார்கட்டு புனித யூதாததேயு ஆலயத்தில் நற்கருணைப் பணியாளரை ஏற்படுத்தும் நிகழ்வு 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்களின் ஏற்பாட்டில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் செல்வி அமிர்தநாதர் எமறன்சியானா அவர்கள் நற்கருணைப்பணியாளராக ஏற்படுத்தப்பட்டடார்.
பொதுநிலையினர் கழக இயக்குனர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிகாட்டலில் அருட்தந்தை பயஸ் இருதயதாஸ் அவர்களின் உருவாக்கத்தில் பயிற்சிபெற்ற செல்வி அமிர்தநாதர் எமறன்சியானா அவர்கள் நீண்டகாலமாக கல்வி பணியில் ஈடுபட்டுவருவதுடன் தற்போது முல்லைத்தீவு குரவில் மகாவித்தியாலயத்தின் துணை அதிபராக பணியாற்றிவருகின்றார்.
செல்வி அமிர்தநாதர் எமறன்சியானா உடையார்கட்டு பங்கில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது நற்கருணைப்பணியாளரென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

