ஆனைக்கோட்டை பங்கிற்குட்பட்ட தேவர்கட்டு திரு இருதய நாதர் ஆலய நூற்றாண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

04ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலி நிறைவில் ஆலய நூற்றாண்டு விழாவை சிறப்பித்து நூற்றாண்டுவிழா மலர் வெளியீடும் தொடர்ந்து தோழமை விருந்தும் இடம்பெற்றன.

அத்துடன் அன்று மாலை ஆலய வளாகத்தில் பங்குமக்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுகளில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin