இலங்கை கிறிஸ்தவமத அலுவல்கள் திணைக்களத்தின் தேசிய நத்தார் நிகழ்வு மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் மார்கழி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

திணைக்கள பணிப்பாளர் திருமதி சதுரி பிந்து அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியில் பங்குகளிடையே நடாத்தப்பட்ட பாலன்குடில் மற்றும் கிறிஸ்மஸ் மரம் அலங்கரித்தல் போட்டியில் வெற்றிபெற்றவர்கள், தேசிய விவிலிய வினாவிடை போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள், நீண்ட காலமாக சேவையாற்றிய மறையாசிரியர்கள், கத்தோலிக்க ஆசிரியர்கள் மற்றும் 25 வருடங்களுக்கு மேலாக திருப்பண்ட அறை காப்பாளர்களாக பணியாற்றியவர்களுக்கான பரிசளிப்பு, கௌரவிப்பு என்பவற்றுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரும் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயருமான பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் குமாரி, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரட்ணம், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சுலைமா மொஹமட் லிப்றாஸ் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், அருட்சகோதரிகள், மாணவர்கள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin