தேசிய கத்தோலிக்க இளையோர் ஞாயிறை சிறப்பித்து யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 07ஆம் திகதி ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.

மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தலைவர் செல்வன் நிராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் திருப்பலி நிறைவில் புனித யாகப்பர் ஆலயத்திலிருந்து யாழ். பிரதான வீதி ஊடாக புனித மரியன்னை பேராலயத்தை நோக்கிய இளையோர் எழுச்சி பேரணியும் இடம்பெற்றன.

தொடர்ந்து பேராலய மண்டபத்தில் அரங்கநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர் திரு. அகஸ்ரின் அவர்களின் “தற்கால இளையோரும் இறைவார்த்தையும்” என்னும் தலைப்பிலமைந்த சிறப்புரையும் குருநகர் பங்கு இளையோர் ஒன்றியத்தினரின் யூபிலி ஆண்டு வில்லுப்பாட்டும் அதிஸ்டலாப சீட்டிழுப்பும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளரும் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநருமான அருட்தந்தை செபஜீவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் ஆணைக்குழுவின் முந்நாள் தலைவர் திரு. ஜெயந்த் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்ததுடன் மறைக்கோட்ட இணைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 170ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin