தேசிய அன்பிய ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட அன்பிய மாநாடு தை மாதம் 12, 13ஆம் திகதிகளில் கொழும்பு தேவத்தை பசிலிக்காவில் நடைபெற்றது.
தேசிய இயக்குநர் அருட்தந்தை பிரிய ஜெயமான்ன அவர்களின் தலைமையில் ஆணைக்குழுவுக்கு பொறுப்பான காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்ரமசிங்க அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இம்மாநாட்டில் கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், கலந்துரையாடல் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மறைமாவட்ட அன்பிய இயக்குநர்கள், பிரதிநிகளென 42 வரையானவர்கள் கலந்து கொண்டதுடன் யாழ். மறைமாவட்டதிலிருந்து மறைமாவட்ட அன்பிய இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் வழிகாட்டலில் அருட்தந்தை அஜந்தன், அருட்தந்தை லியான்ஸ் அருட்சகோதரி மேரி ஆரோக்கியநாதன் மற்றும் திரு, திருமதி தேவராஜா பிறேமா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

