தேசிய அன்பிய ஆணைக்குழு கூட்டம் பங்குனி மாதம் 3ஆம், 4ஆம் திகதிகளில் இரத்தினபுரி மறைமாவட்டம் குடாகம லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

தேசிய இயக்குநர் அருட்தந்தை பிரிய ஜெயமான்ன அவர்களின் தலைமையில்; இடம்பெற்ற இக்கூட்டத்தில் கலைநிகழ்வுகள், அன்பிய தரிசிப்பு, அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சி, அறிக்கை சமர்ப்பிப்பு என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மறைமாவட்ட அன்பிய இயக்குநர்கள் மற்றும் பிரதிநிகள் கலந்து கொண்டதுடன் இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் வைமன் குரூஸ் அவர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.

யாழ். மறைமாவட்டதிலிருந்து மறைமாவட்ட அன்பிய இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன், அருட்தந்தை லியான்ஸ் திருமதி அன்ரனி றொபேட் லெசியா மற்றும் திருமதி யுஸ்லின் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin