சுனாமி ஆழிப்பேரலை அனர்த்த நினைவாக கட்டைக்காட்டு பங்கின் சென்மேரிஸ் நாடக மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட “துயர் சுமந்த கரைகள்” இறுவட்டு வெளியீடு மார்கழி மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கட்டைக்காடு கப்பலேந்திமாதா சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவனும் பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட மாணவனுமான நெய்தலூரான் யெமில் அவர்களின் வரிகளில் உருவான இறுவட்டை கட்டைக்காடு வெற்றிலைக்கேணி பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்கள் வெளியிட்டுவைத்தார்.

