தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா வருகிற ஆவணி மாதம் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யூலை மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்னையின் கொடியேற்றப்பட்டு தினமும் மாலை 4:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகுமெனவும் ஆவணி மாதம் 4ஆம் திகதி மாலை 5 மணிக்கு செபமாலையுடன் நற்கருணை விழாவும் 5ஆம் திகதி காலை 7 மணிக்கு திருவிழாத் திருப்பலியும் நடைபெறுமெனவும் இதற்கு வருகைதரும் பக்கதர்களுக்கான போக்குவரத்து வசதிகள் யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்துறை பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திருத்தல பரிபாலகர் அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin