தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் முதலாம் குழுவினருக்கான தியானம் மாசி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் தீவகம் மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த இறைமக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இத்தியானத்தில் திருச்சிலுவைப்பாதை, நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பவை இடம்பெற்றன.

திருப்பலியை தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin