யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டிலுசன் பியுமால் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி தினமும் மாலை 4.30 மணிக்கு திருச்செபமாலையுடன் திருப்பலி இடம்பெறுமெனவும் 27ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழாவும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 06.30 மணிக்கு திருச்செபமாலையுடன் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுமெனவும் அருட்தந்தை டிலுசன் பியுமால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

By admin