திருமறைக் கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்ற தின நிகழ்வு மார்கழி மாதம் 03ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞான சுரபி தியான இல்லத்தில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து மன்ற பிரதான அலுவலக முன்றலில் மன்றக்கொடி ஏற்றப்பட்டு கலைத்தூது மணிமண்டபத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
இவ்இரத்ததான நிகழ்வில் 24 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.
டிட்வா புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடனான ஒன்றிப்பை வெளிப்படுத்தி அன்றைய தினம் மாலை நடைபெறவிருந்த கலை நிகழ்வுகள் நிறுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

