திருப்பாலத்துவ சபை தினத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டம் இலுப்பைக்குளம் பங்கு திருப்பாலத்துவ சபை சிறார்கள் இணைந்து முன்னெடுத்த போதை மற்றும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாசி மாதம் 04ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நியூட்டன் தேவராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணி இலுப்பைக்குளம் அடைக்கல அன்னை ஆலயத்தில் ஆரம்பமாகி வேப்பங்குளம் கர்த்தர் ஆலயத்தை சென்றடைந்து அங்கு வழிபாடும் அனுபவ பகிர்வும் நடைபெற்றன.

இப்பேரணியில் 100 சிறார்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin