யாழ்ப்பாணம் திருநெல்வேலி றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா ஆவணி மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திரு. செந்தில்குமரன் அவர்களின் தலைமையில்; நடைபெற்ற இந்நிகழ்வில் 2022, 2023, 2024ஆம் கல்வி ஆண்டுகளில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த முறையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி சின்னத்தம்பி பத்மராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன திட்டமிடல் முகாமையாளர் செல்வி நித்திலா மரியாம்பிள்ளை அவர்கள் சிறப்பு விருந்தினராகவும்; கலந்து கொண்டதுடன் யாழ். மறைமாவட்ட புனித வளனார் கத்தோலிக்க அச்சக முகாமையாளர் அருட்தந்தை றொசான் அவர்கள் கலந்து ஆசியுரையையும் வழங்கினார்.

By admin