திருத்தந்தை அவர்களின் மறைவிற்கு இலங்கை இந்துக்குருமார் அமைப்பு அண்மையில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 25ஆம் திகதி வெளியிட்டுள்ள இச்செய்தியில் சமயம், இனம், மொழி கடந்து அன்பினை நேசித்து மனித மாண்பை மதித்தவராக விளங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இழப்பு மிகவும் கவலையை அளித்துள்ளதுடன் திருத்தந்தையின் ஆன்ம ஈடேற்றத்திற்காக இலங்கை சைவ மக்கள் சார்பில் இறைவேண்டல் செய்கின்றோமெனவும் இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ்ப்பாண வாலிப கிறிஸ்தவ சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் YMCA இயக்குநர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க சமூகத்துடன் இணைந்து தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறனறோமெனவும் பணிவு, இரக்கம் மற்றும் சேவை மனப்பாண்மை என்பவற்றிற்கு கலங்கரை விளக்காக விளங்கிய திருத்தந்தையின் வாழ்வு வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்குமெனவும் தெரிவித்துள்ளனர்.