திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பேரருட்தந்தை Andrzej Józwowicz அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் 31ஆம் திகதி சனிக்கிமை நியமனம் பெற்றுள்ளார்.

திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக பணியாற்றிய பேரருட்தந்தை பிறாயன் உடகுவே அவர்கள் எத்தியோப்பியா நாட்டிற்கான திருத்தூது பிரதிநிதியாக பணிமாற்றம் செய்யபட்ட நிலையில் பேரருட்தந்தை Andrzej Józwowicz அவர்கள் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதியாக நியமனம் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

1965ஆம் ஆண்டு தை மாதம் 14ஆம் திகதி போலந்து நாட்டில் பிறந்த பேரருட்தந்தை Andrzej Józwowicz அவர்கள் 1990ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு வத்திக்கான் தூதரக சேவையில் இணைந்தார்.

இவர் 2017 முதல் 2021 வரை ருவாண்டாவிலும், 2021 முதல் தற்போது வரை ஈரானிலும் திருத்தந்தையின் திருத்தூது பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார்.

By admin