திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவருகைக்கால ஜெப ஆராதனை மார்கழி மாதம் 05ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அலஸ்தோட்டம் இறையிரக்க திருத்தலத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, நற்கருணை வழிபாடு, துதி ஆராதனை, இறைவார்த்தைப்பகிர்வு, தியான உரைகள் என்பன இடம்பெற்றன.

தியான உரைகளை அருட்தந்தை யூட் சர்வானந்தன், அருட்தந்தை சேவியர் ரஜீவா, அருட்தந்தை போல் றொபின்சன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin