திருகோணமலை மறைமாவட்ட தவக்கால இறைவேண்டல் ஆராதனை பங்குனி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, நற்கருணை வழிபாடு, துதி ஆராதனை, இறைவார்த்தை பகிர்வு என்பன இடம்பெற்றன.
இவ் ஆராதனையை அருட்தந்தை சேவியர் ரஜீவா மற்றும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சந்திரதாஸ் ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தினர்.
இவ்வழிபாடுகளில் ஏராளமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

