இளையோருக்கான யூபிலியை சிறப்பித்து திருகோணமலை மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் 12ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றன.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை றஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் செபமாலை பவனி, இளையோருக்கான சிறப்பு நிகழ்வுகள், திருப்பலியென்பன இடம்பெற்றன.
செபமாலை பவனி பாலையூற்று குடைமாதா சந்தியில் ஆரம்பமாகி பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலத்தலத்தை சென்றடைந்து அங்கு நிறைவடைந்தது.
தொடர்ந்து இளையோருக்கான தலைமைத்துவ பயிற்சிகள், உரைகள், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் என்பன நடைபெற்றுதுடன் நிறைவு நிகழ்வாக திருப்பலி இடம்பெற்றது.
இவ்யூபிலி நிகழ்வுகளில் 135 வரையான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.