திருகோணமலை மறைமாவட்ட பங்குகளின் பொருளாதார, கல்வி மற்றும் சமூக தேவைகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து மேம்படுத்தும் நோக்கில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் சமூக செயற்பாட்டுக்குழுக்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.
இதுவரை உவர்மலை, கும்புறுப்பிட்டி, லிங்கநகர் மற்றும் மூதூர் சமூக செயற்பாட்டுக்குழுக்களை சந்தித்த ஆயர் அவர்கள் அப்பங்குகளிலுள்ள தேவைகள், பிரச்சினைகளை அவர்களிடம் கேட்டறிந்தார்.